நான்காவது முறையாக மாஸ் காண்பித்த மேட்டூர் அணை...! - Seithipunal
Seithipunal


டெல்டா மக்களுக்கு பெரும் தெய்வமாக காட்சியளிக்கும் மேட்டூர் அணையானது, நான்காவது முறையாக நிரம்பியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை மூலமாக காவேரி டெல்டா பகுதிகள் செழிப்படைந்து காணப்படுகிறது. மேட்டூரில் இருந்து திறக்கப்படும் நீர், கடைமடைப்பகுதி வரை சென்றடைந்து விவசாயிகள் பலன் பெற குடிமராமத்து பணிகள் நடைபெற்றது. 

இந்த வருடம் எதிர்பார்த்த அளவு மழையும் பெய்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள காவேரி ஆற்றுப்பகுதியில் பெய்த மழையால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து இருந்தது. இதனால் ஏற்கனவே மேட்டூர் அணை 100 அடி கொள்ளளவை எட்டியிருந்தது. 

தற்போது பெய்து வரும் பருவமழை காரணமாக நடப்பாண்டிலேயே நான்காவது முறையாக மேட்டூர் அணை 100 அடி கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Salem Mettur Dam 100 Feet Water Quantity 2020 Year 4 th Time


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->