புகழ்பெற்ற கோவில் சுவரில் போஸ்டர் ஒட்டிய மர்ம நபர்: தீவிர விசாரணையில் போலீசார்!
Salem kashiviswanath temple wall drove poster
சேலம், 2வது அக்ரஹாரத்தில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு உள்ளூர் மட்டும் இன்றி வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
தற்போது இந்த கோவிலில் பாலாலயம் செயல்பட்டு திருப்பணிகள் நடைபெற்று விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் கோவில் சுவற்றில் ஒரு அரசியல் போஸ்டர் மற்றும் கட்சி சினிமா போஸ்டர் அத்துமீறி ஒட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் சிறு தொண்டர்கள் சபை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் உடனடியாக சேலம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி திறந்தவெளிகள் அழகு சீர்குலைப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் சுவற்றில் அத்துமீறி போஸ்டர் ஒட்டிய நபர்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
Salem kashiviswanath temple wall drove poster