சேலம்: பெண்ணிற்கு திருட்டுத்தனமாக கருக்கலைப்பு முயற்சி.. ஸ்கேன் சென்டர், பெண்ணின் தாய் உட்பட 4 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிந்துகொண்டு கருக்கலைப்பு செய்த நிலையில், பெண் மரணத்தின் வாயில் வரை சென்று மீண்டு வந்துள்ளார். கருக்கலைப்பு குற்றத்தில் ஈடுபட்ட மருத்துவர், ஸ்கேன் மையம் மற்றும் பெண்ணின் உறவினர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் மல்லியக்கரை பகுதியை சேர்ந்தவர் சரண்யா. இவரது கணவர் அருள். அருள் கடலூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், சரண்யா தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். 

இதனால், மல்லியக்கரை அருகேயுள்ள கோபாலபுரத்தில் தனது பெற்றோரின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கருவிலுள்ள குழந்தையின் பாலினம் குறித்து அறிய, சரண்யாவின் தாயார் பூங்கொடி முடிவு செய்துள்ளார். இதனை பக்கத்து வீட்டில் உள்ள அலமேலு என்பவரிடம் கூறவே, அலமேலுவின் மூலமாக ஆத்தூரில் ஸ்கேன் மையம் நடத்தி வந்த புகழ் என்பவர் அறிமுகமாகிறார். 

சரண்யாவிற்கு சட்டவிரோதமாக ஸ்கேன் செய்து பார்த்ததில், கருவில் இருப்பது பெண் குழந்தை என்பது உறுதியானது. மூன்றும் பெண்களாக இருந்தால் என்ன செய்வது என்று குழம்பிய பூங்கொடி, கருவை கலைக்க முடிவு செய்துள்ளனர். 

இதற்கு போலி மருத்துவர் பூமணி என்பவரின் வீட்டில் வைத்து, கடந்த 25 ஆம் தேதி சரண்யாவிற்கு ரகசிய கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன்போது சரண்யாவின் கருப்பையில் பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடியதை தொடர்ந்து, ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனை அனுமதி செய்யப்பட்டுள்ளார். 

பின்னர் கர்ப்பப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, சரண்யாவின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக பெத்தநாயக்கன்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை செய்து, சரண்யாவின் தாய் பூங்கொடி மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அலமேலு, சின்ராசு, தேவி ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும், சரண்யாவிற்கு ஸ்கேன் செய்த புகழ், போலி மருத்துவர் பூமணி ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem illegal abortion baby Fake Doctor and Scan Center Person Arrest by Police


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal