தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரம் பேர் நீக்கம்; சென்னையில் 14.25 லட்சம் பெயர்கள் நீக்கம்..!
9737000 names have been removed from the draft electoral roll in Tamil Nadu
தமிழகம் முழுவதும், எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 97,37,832 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதோடு, அதில் அதிகபட்சமாக சென்னையில் 14,25,018 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
வரும் 2026 ஏப்ரல் மாதம் அளவில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவையுள்ளது. இதையொட்டி, சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை, இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. இதன் முதற் கட்டமாக, வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள், நவம்பர் 04-ஆம் தேதி தொடங்கப்பட்டன.
இதற்காக, தமிழகத்தில் உள்ள, 6.41 கோடி வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள், திரும்ப பெறப்பட்டு, தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் இப்பணிகள், 100 சதவீதம் முடிந்துள்ளதாக, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, இன்று மாநிலம் முழுதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சென்னையில் நிருபர்களை சந்தித்த தலைமை தேர்தல் கமிஷனர் அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது: மாநிலம் முழுவதும் சேர்த்து மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., பணி தொடங்கும் முன் 06 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 பேர் வாக்காளர்களாக இருந்தனர். எஸ்.ஐ.ஆர்., முடிவில், 05 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 பேர் வாக்காளர்களாக உள்ளனர். 97 லட்சத்து 37 ஆயிரத்து 832 பேர் நீக்கப்பட்டுள்ளனர் என்று குறிவிட்டுள்ளார்.
வரைவு வாக்காளர் பட்டியலின்படி,
ஆண் வாக்காளர்கள் - 02 கோடியே 66 லட்சத்து 63 ஆயிரத்து 233 பேர்.
பெண் வாக்காளர்கள் - 02 கோடியே 77 லட்சத்து 06 ஆயிரத்து 333 பேர்.
03-ஆம் பாலினத்தவர்கள்- 07 ஆயிரத்து 191 பேர்.
மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை -04 லட்சத்து 19 ஆயிரத்து 355 பேர்.
அத்துடன், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நேரடியாக சென்று 03 முறை விசாரணை மேற்கொண்டும் கண்டறிய முடியாதவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இறப்பு, பல இடங்களில் பதிவு செய்தவர்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.

பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் யார்..?
இறந்த வாக்காளர்கள்: 26 லட்சத்து 94 ஆயிரத்து 672 பேர்.
இடம்பெயர்ந்தவர்கள்: 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர்.
இரட்டை பதிவுகள்: 03 லட்சத்து 39 ஆயிரத்து 278 பேர்.
இத்யனைதொடர்ந்து, 02 வாரம் சிறப்பு முகாம் நடக்கும். அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் வழங்கலாம். வரைவு வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள் ஓட்டுச்சாவடி அலுவலர்களை அலுவலம் படிவம் 06 ஐ பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று அர்ச்சனா பட்நாயக் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.
மாவட்ட வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்கள் விவரம்:
சென்னை -14.25 லட்சம்
காஞ்சிபுரம் -02.74 லட்சம்
செங்கல்பட்டு-07,01 லட்சம்
திருவள்ளூர் -06.19 லட்சம்
மதுரை -03.80 லட்சம்
சிவகங்கை -01.05 லட்சம்
ராமநாதபுரம் -01.17 லட்சம்
தேனி -01.25 லட்சம்
திண்டுக்கல்- 03.24 லட்சம்
விருதுநகர் - 01.89 லட்சம்
கோவை -06.50 லட்சம்
திருப்பூர் -05.63 லட்சம்
நீலகிரி - 56,091
ஈரோடு -03.25 லட்சம்
கன்னியாகுமரி -01.53 லட்சம்
கடலூர் -02.46 லட்சம்
விழுப்புரம் -01.82 லட்சம்
கள்ளக்குறிச்சி -84,329
திருநெல்வேலி-02.16 லட்சம்
தென்காசி -01.51 லட்சம்
தூத்துக்குடி -01.62 லட்சம்
சேலம் -03.62 லட்சம்
கிருஷ்ணகிரி -01.74 லட்சம்
நாமக்கல் -01.93 லட்சம்
திருச்சி -03.31 லட்சம்.
அரியலூர் -24,368
கரூர் - 79,690
பெரம்பலூர்- 49,548
மயிலாடுதுறை-75,378
நாகப்பட்டினம் -57,338
தஞ்சாவூர் -02.06 லட்சம்
புதுக்கோட்டை-01.39 லட்சம்
வேலூர் -02.15 லட்சம்
ராணிப்பேட்டை -01.45 லட்சம்
திருப்பத்தூர் -01.16 லட்சம்
தர்மபுரி -81,515
திருவாரூர் -01.29 லட்சம்
திருவண்ணாமலை -02.52 லட்சம்.
அத்துடன், முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 1,03,812 ஓட்டுக்களும், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் தொகுதியான எடப்பாடியில் 26,375 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் வெளியிடும் வரை, புதிய வாக்காளர்கள் சேர்ப்பு பணியில், தமிழக கட்சிகள் ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
9737000 names have been removed from the draft electoral roll in Tamil Nadu