விவசாயி மீது துப்பாக்கி சூடு: வனப்பகுதியை சுத்து போட்ட போலீசார்!
Salem Firing on farmer Police hammered the forest area
சேலம், கல்வராயன் மலை பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகன் ராஜு (வயது 33). இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இவர் நேற்று மாலை 5 மணி அளவில் அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்று ஆடுகளுக்கு தழைகளை வெட்டிக் கொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதுடன் இவரது இடது கால் முட்டி மற்றும் வலது கால் தொடை பகுதிகளில் துப்பாக்கி கொண்டு பாய்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த ராஜூ சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த அவர் உறவினர் மகன் ராமன் என்பவருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்த தகவல் அறிந்த ராமன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜுவை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு அவரது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த காயம் இருந்ததால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் ராஜுவிடம் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து ராஜு மீது துப்பாக்கி சூடு நடத்திய நபரை வனப்பகுதியில் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Salem Firing on farmer Police hammered the forest area