கர்ப்பமாக்கியதால், கைது செய்யப்பட்ட கணவர்.. இது தான் காரணமா.?!
Salem District Husband arrested in Pocso
சிறுமியை கர்ப்பமாக்கிய காரணத்தால் அவருடைய கணவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள மெய்யனூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக நிறைமாத கர்ப்பிணியாக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார். மருத்துவர்கள் அவரிடம் விசாரித்த போது அந்த சிறுமி கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வருவதும் தனது தாய் மாமன் மகனை அவர் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது.

இது பற்றி மருத்துவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பெயரில் சேலம் மாவட்ட சமூக நல அலுவலர் ஈஸ்வரி சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் மருத்துவமனைக்கு விரைந்து வந்த விசாரித்த போலீசார் சிறுமியின் தாய் மாமனான மெய்யனூர் பனங்காடு பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் நந்தகுமார் 25 வயது என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர். மேலும், தலைமறைவாக இருக்கும் நந்தகுமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Salem District Husband arrested in Pocso