உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவதற்கு ரூ.20.92 கோடி  சிஎம்டிஏ நிதி..அமைச்சர்கள் வழங்கினர்!  - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவதற்காக சிஎம்டிஏ நிதியிலிருந்து ரூ.20.92 கோடி நிதியை அமைச்சர்கள் ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் திருமதி.க.ஆர்த்தி அவர்களிடம் வழங்கினர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (13.08.2025) சென்னை, சிஎம்டிஏ அலுவலகக் கூட்டரங்கில் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்தில் அய்யப்பந்தாங்கல், பரணிபுத்தூர், மௌலிவாக்கம், கெருகம்பாக்கம், கோவூர், கொளப்பாக்கம், தண்டலம் ஆகிய பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவதற்காக சிஎம்டிஏ நிதியிலிருந்து ரூ.20.92 கோடி நிதியை  மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் திருமதி.க.ஆர்த்தி அவர்களிடம் வழங்கினர்.

 இந்நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி.காகர்லா உஷா, இ.ஆ.ப., சிஎம்டிஏ உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் திரு.கோ.பிரகாஷ், இ.ஆ.ப., முதன்மைச் செயல் அலுவலர் திரு.அ.சிவஞானம், இ.ஆ.ப., தலைமைத் திட்ட அமைப்பாளர் திரு.எஸ்.ருத்ரமூர்த்தி  மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rs. 20.92 crore allocated by CMDA for the improvement of infrastructure facilities announced the ministers


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->