விசாரணையில் போலீசை கத்தியால் குத்திய ரவுடி புள்ளிங்கோ..! என்.எல்.சியில் பரபரப்பு..!  - Seithipunal
Seithipunal


டலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தின் அருகாமையில் இருக்கும் இரும்பு தடவாள  பொருட்கள் திருடு போனது, தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்புப் படை காவலர்கள் ஆன செல்வேந்திரன், பாத்திரதாஸ், கருணாகரன் உள்ளிட்டோர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். 

அந்த சமயத்தில், அந்த பகுதிக்கு பிரபல ரவுடியான பெங்களூரு மணி மற்றும் அவரின் கூட்டாளிகள் அந்த பக்கம் வந்திருக்கிறார்கள். அப்போது அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் போதே, பெங்களூரு மணி காவலர் செல்வேந்திரனை கத்தியால் குத்தினார். இதன் காரணமாக காவலர் படுகாயமடைந்ததாகத் தெரிகிறது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடியது.

அதன் பின்னர், படுகாயமடைந்த காவலர் செல்வேந்திரனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்கள். இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rowdy attack police in cuddalore


கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
Seithipunal