சாப்பாட்டுக்கே வழி இல்ல.!! சென்னையின் பல பகுதிகளில் பொது மக்கள் சாலை மறியல் - Seithipunal
Seithipunal


சென்னையை புரட்டி போட்டு மிக்ஜாம் புயலால் கனமழை பெய்து தலைநகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கடந்த 3 நாட்களாக மின் நியோகம் இல்லாமல் சென்னையில் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளது. 

இதனால் பொறுமை இழந்த சென்னைவாசிகள் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வண்ணாரப்பேட்டையில் இன்று நடைபெற்ற சாலை மறியலின் போது பொதுமக்களின் குறைவு கேட்கச் சென்ற திமுக அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சென்னை ஓஎம்ஆர் குமரன் நகர் சிக்னல் அருகே ஏராளமான பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். கடந்த மூன்று நாட்களாக துண்டிக்கப்பட்டுள்ள மின் வினியோகத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையோடு தேசிய நெடுஞ்சாலையில் 500க்கும் பொதுமக்கள் குவிந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மழைநீர் சூழ்ந்துள்ள குமரன் நகர் பகுதிக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும் எனவும், அரசு சார்பில் உணவு பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை கொடுத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குமரன் நகர் மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Road blockade by public in many parts of Chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->