பிரபஞ்சன் மறைவு : இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு- மருத்துவர் அன்புமணி ராமதாஸ்!!
சாகித்ய அகாடமி விருதுப்பெற்ற பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் புற்றுநோய் காரணமாக இன்று காலமானார்.
சாகித்ய அகாடமி விருதுப்பெற்ற பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் புற்றுநோய் காரணமாக இன்று காலமானார்.

73 வயதாகும் இவர் புதுவையை சேர்ந்தவர் ஆவார். இவர் எழுதிய "வானம் வசப்படும்" என்ற வரலாற்றுப் புதினத்திற்கு,1995-ம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார்.

100க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதிய இவர், புதுவை அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருதையும் பெற்றார். இது மட்டுமல்லாமல், தமிழக அரசின் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருதையும் பெற்றுள்ளார். இதுவரை 86 புத்தகங்களுக்கு மேல் இவர் எழுதி இருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த ஓர் ஆண்டாகவே பிரபஞ்சன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்த போதும், சிகிச்சை பலனில்லாமல், பிரபஞ்சன் இன்று காலமானார்.

இவரது இழப்பு தமிழ் இலக்கியத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். ஏனெனில், தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத எழுத்தாளுமைகளில் மிக மிக முக்கியமானவர் பிரபஞ்சன்.
இந்நிலையில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பிரபஞ்சன் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதாவது, பாமகவுடன் இணைந்து சமூகநீதி பயணம் மேற்கொண்ட எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது, அவரது மறைவு இதழியல் மற்றும் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அன்புமனு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
RIP Prapanchan Tamil Writter