#சேலம் || 60 அடி ஆழக்கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு.! உயிருடன் மீட்பு.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்டு உள்ளனர்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே சின்னப்பம்பட்டி சந்தை பகுதியை சேர்ந்தவர் விவசாயி வெங்கடாசலம். இவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதைப்பார்த்த வெங்கடாசலம் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு கிணற்றுக்குள் தவறி விழுந்த பசு மாட்டினை உயிருடன் மீட்டு மாட்டின் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rescue of a cow that fell into a 60 feet deep well in salem.


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->