அக் - 3 ஆம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை.!!
request to cm mk stalin for holiday to october 3
அக்டோபர் மூன்றாம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் அமிர்தகுமார் கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
"வரும் அக்டோபர் மாதம் 1-ந் தேதி ஆயுத பூஜை விடுமுறையாகவும், 2- ந் தேதி விஜய தசமி, அரசு விடுமுறையாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் புதன் மற்றும் வியாழக்கிழமையில் வருகின்றன.

இதற்கு அடுத்து வரும் 3-ந் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாளாக உள்ளது. அதன் பின்னர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்று தொடர்ந்து விடுமுறை நாட்களாக உள்ளன. ஆகவே இடையில் உள்ள 3-ந் தேதியை மட்டும் விடுமுறையாக அரசு அறிவித்தால் 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும். தசரா பண்டிகையை அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மகிழ்வுடன் கொண்டாடுவார்கள்.
இந்தப் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்பவர்களும் இந்த விடுமுறையை நன்றாக கொண்டாடிவிட்டு பணிக்கு மகிழ்வுடன் வருவார்கள். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஏற்கனவே இந்நாட்கள் தசரா விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே அக்டோபர் 3-ந் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
request to cm mk stalin for holiday to october 3