புதிய வாடகைச் சட்டம் 2025: வாடகை ஒப்பந்தப் பதிவு கட்டாயம் – இருதரப்புக்கும் பாதுகாப்பு வழங்கும் முக்கிய விதிகள்
Rent house new rule tamilnadu india
வீடு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025 விரைவில் அமலுக்கு வர உள்ளது. வாடகைக்குக் குடியிருப்பவர்கள் மற்றும் வீடுகளை வாடகைக்கு விடுவோர் என இரு தரப்பினருக்கும் புதிய விதிமுறைகளையும், பாதுகாப்பையும் கட்டாயமாக்கியுள்ள இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒப்பந்தப் பதிவு மற்றும் முன்பணம்
பதிவு கட்டாயம்: வீட்டு உரிமையாளர்கள் வாடகை ஒப்பந்தத்தை 2 மாதங்களுக்குள் ஆதார் அடிப்படையிலான மின்னணு சரிபார்ப்பு மூலம் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் ரூ. 5,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
முன்பணம்: வீட்டு வாடகைக்கு 2 மாத வாடகைக்கு மேல் முன்பணமாகக் கேட்கக்கூடாது. வணிகக் கட்டிடங்களுக்கு 6 மாத வாடகையை முன்பணமாக வசூலிக்கலாம்.
வாடகை உயர்வு: ஒருவர் வாடகைக்கு வந்த பிறகு 12 மாதங்கள் கழித்துத்தான் வாடகையை உயர்த்த முடியும். அதற்கும் 2 மாதங்கள் முன்பே வாடகைதாரர்களுக்கு நோட்டீஸ் மூலம் தெரிவிக்க வேண்டும்.
வாடகைதாரர் மற்றும் உரிமையாளர் உரிமைகள்
பழுதுபார்ப்பு: வாடகை வீட்டில் பழுது ஏற்பட்டால், உரிமையாளர்கள் 30 நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும். தவறினால், வாடகைதாரர்களே சரி செய்து, வாடகைத் தொகையில் அதைக் கழித்துக் கொள்ளலாம்.
வீட்டுக்குள் நுழைதல்: வாடகைக்கு இருக்கும் வீட்டைச் சரிபார்க்க, உரிமையாளர் 24 மணி நேரத்துக்கு முன்னதாக எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்து அனுமதி பெற வேண்டும். நினைக்கும்போதெல்லாம் நுழைய முடியாது.
காலி செய்ய வற்புறுத்தல்: வாடகை செலுத்தாமல் இருத்தல் போன்ற குறிப்பிடப்பட்ட காரணங்கள் இன்றி, வாடகைக்கு இருப்போரை உரிமையாளர் காரணமின்றி காலி செய்ய வலியுறுத்தக்கூடாது.
தகராறுகளுக்குத் தீர்வு: வாடகைத் தகராறு வழக்குகளுக்குச் சிறப்புத் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு, வழக்குகள் இனி 2 மாதங்களில் விரைந்து முடிக்கப்படும்.
இந்தச் சட்டம் வாடகைதாரர்களுக்குக் குறைந்த முன்பணம், திடீர் வாடகை உயர்விலிருந்து பாதுகாப்பு மற்றும் சட்டப் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்கிறது. உரிமையாளர்களுக்கு வரிச் சலுகை மற்றும் வலுவான ஆவணம் உருவாக்கம் மூலம் பாதுகாப்பை வழங்குகிறது.
English Summary
Rent house new rule tamilnadu india