ஆடிப்பெருக்கு அன்று பத்திரப்பதிவுகள் நடைபெறுமா? - பத்திரப்பதிவுத்துறை முக்கிய அறிவிப்பு.!!
registration office leave adiperukku day
பொதுவாக ஆடி மாதத்தில் பத்திரப்பதிவுகள் குறைவாக இருக்கும். ஆனால் ஆடி பதினெட்டு எனப்படும் ஆடிப்பெருக்கு தினத்தன்று மிகுந்த நல்ல நாள் என்பதால் அன்றைய தினம் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடக்கும். இந்த நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்டு 3-ந்தேதி ஆடிப்பெருக்கு கொண்டாடப்படவுள்ளது.
ஆனால் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை. அதுவும் பொது விடுமுறை என்பதால் இந்த நாளில் பத்திரப்பதிவுகள் நடக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக முகூர்த்தம் மற்றும் நல்ல நாட்களில் அதிகளவு பத்திரப்பதிவுகள் நடக்கும் என்பதால் அன்றைய தினங்கள் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறப்பதற்கு பத்திரப்பதிவுத்துறை முன்பு திட்டமிட்டது.
அந்த வகையில், கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி முகூர்த்த நாளன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறக்கப்படும் என்றும், பொதுமக்கள் அன்றைய தினம் பதிவுகளை மேற்கொள்ளலாம் என்றும் அறிவித்து இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் பணிக்கு வராததால் ஞாயிற்றுக்கிழமைகளில் பதிவு வேண்டாம் என்று பத்திரப்பதிவு துறை முடிவு செய்துவிட்டது. இதன் காரணமாக ஆடிப்பெருக்கு நாளன்று பதிவுகள் கிடையாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
registration office leave adiperukku day