கள்ளத்தொடர்புக்கு மறுப்பு.. நண்பரின் மனைவியை கொன்ற வாலிபர்!
Refusal for an illicit relationship A youth who murdered a friends wife
கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் கணவரின் நண்பரிடம் கள்ளதொடர்பு வைக்க மறுப்பு தெரிவித்ததால் அந்த பெண் கொலை செய்யப்பட்டார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே திருபாளையாவில் வசித்து வந்தவர் மந்திரா மண்டல் .27 வயதான இவருக்கும், பிஜோன் என்ற கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்து, இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த தம்பதியின் சொந்த ஊர் மேற்கு வங்காளம் ஆகும்.குடும்ப பிரச்சினையால் பிஜோன், மந்திரா ஆகியோர் பிரிந்து வாழ்ந்தனர்.
பிஜோனின் நண்பர் சுமன் மண்டல் அந்தமானுக்கு வேலைக்கு சென்றிருந்தனர். சமீபத்தில் சுமன் மட்டும் பெங்களூருவுக்கு திரும்பி வந்திருந்தார். இந்த நிலையில், கடந்த 5-ந்தேதி இரவு மந்திரா வீட்டுக்கு சென்ற சுமன், அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் வீட்டின் மற்றொரு அறையில் சுமனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
இதுகுறித்து ஹெப்பகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடந்த விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்துள்ளது. கணவரை பிரிந்து வாழ்ந்த மந்திரா, அவரது நண்பரான சுமனிடம் பேசி பழகி வந்துள்ளார். ஆனால் கடந்த 5-ந் தேதி இரவு மந்திரா வீட்டிற்குள் சென்ற சுமன் தன்னுடன் கள்ளத்தொடர்பு வைத்து கொள்ளும்படி வற்புறுத்தி இருக்கலாம் என்றும், இதற்கு மந்திரா சம்மதம் தெரிவிக்காததால் அவரை கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பின்னர் போலீசுக்கு பயந்து சுமன் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். 2 பேருக்கும் கள்ளத்தொடர்பு இல்லை என்று ஹெப்பகோடி போலீசார் தெரிவித்துள்ளனர். அதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
English Summary
Refusal for an illicit relationship A youth who murdered a friends wife