ரீல்ஸ் வீடியோ மோகம்.. ரெயிலில் சிறுவனுக்கு நடந்த விபரீதம்! - Seithipunal
Seithipunal


சமூக வலைதளங்களில் அதிக லைக்குகளுக்காக ஆபத்தான ரீல்ஸ் வீடியோக்கள் எடுக்கும் பழக்கம் இன்னொரு உயிரை பறித்துள்ளது.

நவிமும்பை பெலாப்பூரை சேர்ந்த ஆரவ் ஸ்ரீவஸ்தவா (வயது 16) என்ற சிறுவன், ரீல்ஸ் வீடியோ எடுக்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

ஜூலை 6-ஆம் தேதி, ஆரவ் தனது நண்பர்களுடன் நேருல் ரெயில் நிலையத்துக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த சரக்கு ரெயிலின் பெட்டியின் மேல் ஏறி வீடியோ எடுக்க முயன்றார். அந்த நேரத்தில் அவர் எழுப்பிய கை மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் பட்டது. உடனே மின்சாரம் பாய்ந்ததால், அவர் கீழே தூக்கி வீசப்பட்டு, தலை உள்ளிட்ட உடலின் பல இடங்களில் படுகாயமடைந்தார்.

அருகில் இருந்த நண்பர்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தனர். உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை, பின்னர் ஐரோலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக மாற்றினர். ஆறு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டும், சிறுவன் ஜூலை 12-ஆம் தேதி உயிரிழந்தார்.

சமூக வலைதள வீடியோ மோகம் – உயிருக்கு விலை!

இளம் தலைமுறையில் செல்போன் மற்றும் சமூக வலைதளங்கள் மீது உள்ள மோகம், அவர்கள் ஆபத்தான செயலை செய்யத் தூண்டுகிறது என பெற்றோர் மற்றும் பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். 'வீடியோவை பதிவு செய்தால் போதும்' எனும் எண்ணத்தில், பாதுகாப்பு விதிகளை புறக்கணிப்பதே பல விபத்துகளுக்கு காரணமாக உள்ளது.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Reels video craze The horrifying incident that happened to a boy on the train


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->