பிறப்பு சான்றிதழ் கிடைக்காமல் மக்கள் சிரமம்...வைத்திலிங்கம் எம்.பி குற்றச்சாட்டு!
People are struggling without a birth certificateVaithilingam Ms accusation
புதுச்சேரி காரைக்கால் மாகி மற்றும் ஏனாம் பகுதி உட்பட முன் எப்போதும் இல்லாத நிகழ்வாக கடந்த ஒரு வார காலமாக பிறப்பு இறப்பு பதியப்படாமலும் பிறப்பு, இறப்பு சான்று வழங்காமலும் இருந்து வருகின்றது என்று பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவரும்,MP யுமான வெ.வைத்திலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவரும்,MP யுமான வெ.வைத்திலிங்கம் கூறியதாவது:புதுச்சேரி அரசு உள்ளாட்சித் துறையின் அலட்சியத்தால் புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி காரைக்கால் மாகி மற்றும் ஏனாம் பகுதி உட்பட முன் எப்போதும் இல்லாத நிகழ்வாக கடந்த ஒரு வார காலமாக பிறப்பு இறப்பு பதியப்படாமலும் பிறப்பு, இறப்பு சான்று வழங்காமலும் இருந்து வருகின்றது.
இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, மாணவர்கள் மேற்படிப்பிற்காகவும் மற்றும் பாஸ்போர்ட் வாங்குவது போன்ற காரணங்களுக்காக அவசியம் தேவைப்படும் பிறப்பு சான்றிதழ் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.
நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் பொதுமக்களை அலைக்கழிப்பதுபோல் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில், புதுச்சேரி முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள உள்ளாட்சித் துறையின் பொறுப்பற்ற செயலால் புதுவை மக்கள் மற்றும் அருகில் உள்ள மாவட்ட மக்களும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். புதுவை அரசு இந்தப் பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு புதுச்சேரி அரசின் மானம் காக்க வேண்டும். இல்லையேல், மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று வெ.வைத்திலிங்கம் எம்.பி தெரிவித்துள்ளார்.
English Summary
People are struggling without a birth certificateVaithilingam Ms accusation