என்னது... பட்டர் இறால் முட்டை மசாலாவா... அய்யோ டேஸ்ட் அல்டிமேட்டா இருக்குமே...!
What is it Butter shrimp egg masala Oh my the taste is ultimate
பட்டர் இறால் முட்டை மசாலா
தேவையான பொருட்கள்:
பொருள் - அளவு
பட்டர் 1 கப்
இறால் கால் கிலோ
முட்டை 4
பொpய வெங்காயம் 2
தக்காளி 2
பட்டை 2
கிராம்பு 3
பிரிஞ்சி இலை 2
சோம்பு 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
கறிவேப்பிலை 1 கொத்து

செய்முறை :
முதலில்,இறாலைச் சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும். முட்டையை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை மற்றும் ப்ரிஞ்சி இலை சேர்த்து பொரிந்ததும், வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும், தக்காளியைச் சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கி, இறாலைச் சேர்த்து வதக்கவும்.
பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும்.மசாலா திக்கானதும் அதனுடன் பட்டர் மற்றும் வேகவைத்த முட்டைகளை குறுக்காக வெட்டிப் போட்டு நன்கு பிரட்டி இறக்கவும். சுவையான பட்டர் இறால் முட்டை மசாலா தயார்.
தனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள மிகவும் பொருத்தமாக இருக்கும்.
English Summary
What is it Butter shrimp egg masala Oh my the taste is ultimate