குடிமைப் பணிகள் தேர்வு..தேர்வர்களுக்கு மாவட்ட ஆட்சியர் புதிய உத்தரவு!  - Seithipunal
Seithipunal



குடிமைப் பணிகள் தேர்வு எழுதும் தேர்வர்கள்காலதாமதமாக வராமல் குறித்த நேரத்திற்கு முன்புதேர்வு மையத்திற்கு வரவேண்டுமாய் மாவட்ட ஆட்சித்தலைவர்முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் குடிமைப் பணிகள் தேர்வுதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்ததொழில்நுட்ப பணிகள் குடிமைப் பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாதபதவிகள்) (Combined Technical Services Examination (Non – Interview Posts)) CBTMode தேர்வுகள், இராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டத்தில் உள்ளஆதிபராசக்தி அறிவியில் மற்றும் கலைக் கல்லுரியில் (தன்னாட்சி) 04.08.2025 முதல்10.08.2025 வரை முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இருவேளைகளிலும்
நடைபெறவுள்ளது. 

மேற்கண்ட தேர்வு கூடத்தில் அனைத்து நாட்களிலும் சேர்த்துமொத்தம் 257 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்விற்காக கூடுதல் சிறப்புபேருந்து வசதிகள், தடையில்லா மின்சாரம், காவல்துறை பாதுகாப்பு மற்றும் இதரஅனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 

தேர்வுக்கானநுழைவுச்சீட்டுwww.tnpsc.gov.inஎன்றதேர்வாணையஇணையதளத்தில்வெளியிடப்பட்டுள்ளது.முற்பகல் தேர்வர்கள் தேர்வுக்கூடத்திற்கு காலை 08.00 மணி முதல் 09.00 மணிக்குள்வருகை புரிய வேண்டும். பிற்பகல் 1.00 மணி முதல் 02.00 மணிக்குள் வருகை புரியவேண்டும். தாமதமாக வருபவர்கள் தேர்வு கூடத்திற்குள் எக்காரணத்தை கொண்டும்,அனுமதிக்கப்படமாட்டார்கள் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையவழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்வு எழுதும்தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு காலதாமதமாக வராமல் குறித்த நேரத்திற்கு முன்புதேர்வு மையத்திற்கு வரவேண்டுமாய் மாவட்ட ஆட்சித்தலைவர்முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Recruitment for civil services New directive from the district collector to the examiners


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->