#BigBreaking || மக்களே உங்கள் போன் உங்களுக்கு எமனாகலாம்.! சற்றுமுன் ரிசர்வ் வாங்கி வெளியிட்ட பேரதிர்ச்சியான அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


குறுகிய காலத்தில் கடன் கிடைப்பதாக கருதி அங்கீகாரம் இல்லாத மொபைல் ஆப் மூலம் கடன் பெற வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி சற்றுமுன் அறிவித்துள்ளது.

சில நிறுவனங்கள் அதிக வட்டி, மறைமுக கட்டணம் என கடன் வழங்குவதில் முறைகேடு செய்வதாக தகவல் வந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மொபைல் ஆப் மூலமாக சில நிறுவனங்கள் அதிக வட்டி, மறைமுக கட்டணம் என கடன் வழங்குவதில் முறைகேடு செய்வதாக ரிசர்வ் வங்கிக்கு தகவல் வந்துள்ளது.

இதனை அடுத்து பல்வேறு ஆலோசனைகளை பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி தற்போது வழங்கியுள்ளது. அதில், சில நிறுவனங்கள் அதிக வட்டி, மறைமுக கட்டணம் என கடன் வழங்குவதில் முறைகேடு செய்வதாக தகவல் வந்துள்ளது.

குறுகிய காலத்தில் கடன் கிடைப்பதாக கருதி அங்கீகாரம் இல்லாத மொபைல் ஆப் மூலம் கடன் பெற வேண்டாம். கடனை வசூலிக்கவும் ஆப் நிறுவனங்கள் மோசமான நடைமுறைகளைப் பயன்படுத்துவதும் தற்போது தெரியவந்துள்ளது.

ஆப் மூலமாக கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடன் வழங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் தொடர்பான விவரங்களை ரிசர்வ் வங்கி இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். என்று ரிசர்வ் வாங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் முன்னதாகவே இன்று காலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "ரூ.4,000 கடனை திரும்பச் செலுத்தாததற்காக ஆன்லைன் செயலி கந்துவட்டி நிறுவனம் அவமானப்படுத்தியதால், மனமுடைந்த மதுராந்தகத்தைச் சேர்ந்த விவேக் என்ற இளைஞர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

தந்தையின் மருத்துவச் செலவுக்காக வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாத நிலையில் விவேக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கந்து வட்டி நிறுவனம் திட்டியுள்ளது. அவர் திருடன் என்று நண்பர்களிடம் பொய்பரப்புரை செய்துள்ளது. அதுவே தற்கொலைக்கு காரணம்.

ஆன்லைன் செயலி கந்துவட்டி நிறுவனங்களின் இந்தக் கொடுமையால் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த செயலிகளை தடை செய்ய வேண்டும் என ஏற்கனவே நான் வலியுறுத்தியுள்ளேன். எனவே இனியும் தாமதிக்காமல் கந்துவட்டி செயலிகளை தடை செய்ய வேண்டும் " என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RBI announcement


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->