தேர்தல் பொறுப்பாளர் பட்டியலில் நீக்கப்பட்ட செங்கோட்டையன் -  காரணத்தை போட்டுடைத்த ஆர்.பி.உதயகுமார்..! 
                                    
                                    
                                   rb uthayakumar speech about sengottaiyan name no include election charge list
 
                                 
                               
                                
                                      
                                            தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.கவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பேசினர். 
அதன் பின்னர் வெளியில் வந்த அவர்களிடம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பெயர் அ.தி.மு.க. பொறுப்பாளர் பட்டியலில் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்துள்ளதாவது:- 'மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகளுக்கு, தேர்தல் பொறுப்பாளர் பதவி கிடையாது. காரணம் மாவட்ட செயலாளர்கள் அந்தந்த மாவட்டத்தை பார்க்க வேண்டும். 
நான் மாவட்ட செயலாளராக உள்ளேன். எனக்கும் தேர்தல் பொறுப்பாளர் பதவி இல்லை. அ.தி.மு.க.வில் 82 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். இதில் யாரும் பொறுப்பாளர் பட்டியலில் இடம் பெறவில்லை' என்றுத் தெரிவித்தார்.
                                     
                                 
                   
                       English Summary
                       rb uthayakumar speech about sengottaiyan name no include election charge list