வீடு தேடி வரும் ரேஷன் பொருள்! முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்!தேதி குறித்த தமிழ்நாடு அரசு! முழு விவரம் இதோ! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வீடு தேடிச் சென்று வழங்கும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்”வை அறிவித்துள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்தத் திட்டத்தை ஆகஸ்ட் 12 அன்று சென்னையில் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்தத் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட 15.81 லட்சம் குடும்ப அட்டைதாரர்களும், 91,969 மாற்றுத்திறனாளி குடும்பங்களும் பயன்பெற உள்ளனர்.

மொத்தம் 21.70 லட்சம் பயனாளிகளுக்கு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வீடுகளிலேயே வழங்குவர்.

ரூ.30.16 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இந்த மக்கள் நலத் திட்டம், நலிவுற்ற பிரிவினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசால் திட்டமிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ration items coming home Chief Minister Thayumanavar scheme Tamil Nadu government announces date Full details here


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->