அரக்கோணம்: சிமெண்ட் ஓடு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து... 6 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


தனியார் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 6 பேர் தீக்காயத்துடன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சிமெண்ட் ஓடு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று வழக்கம்போல பணியாளர்கள் பணிகளை செய்துகொண்டு இருந்தனர். 

இந்நிலையில், தொழிற்சாலையில் வைக்கப்பட்டு இருந்த நீராவி பாய்லர், தீடீரென வெடித்து சிதறியுள்ளது. பாய்லருக்கு அருகே பணியாற்றி கொண்டு இருந்த 5 வடமாநில தொழிலாளர்கள் உட்பட 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

பிற பணியாளர்கள் அவர்களை மீட்டு உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர். மேலும், அவசர கதியில் பிற பணியாளர்களும் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ranipet Arakonam Cement Sheet Industry Boiler Explosion 6 Injured


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal