மீனவர்கள் கைது எதிரொலி : ராமேஸ்வரத்தில் நாளை முதல் மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunalதமிழகத்தில் இந்த ஆண்டு மீன்பிடி தடைக் காலம் கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை அமலில் இருந்தது. இதையடுத்து தடைக் காலம் முடிந்த நிலையில் ஜூன் 15ம் தேதி முதல் தமிழக மீனவர்கள் விசைப் படகுகளில் கடலுக்கு செல்ல ஆரம்பித்தனர். அன்று ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து மட்டும் சுமார் 3000க்கும் மேற்பட்ட மீனவர்கள் 600 விசைப் படகுகளில் கடலுக்கு சென்றனர். 

இந்நிலையில் இன்று ஜூன் 23 அதிகாலை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ஜஸ்டின், ரெய்மெண்ட் மற்றும் ஹெரின் ஆகியோருக்கு சொந்தமான 3 விசைப் படகுகளை தங்கள் எல்லையில் மீன் பிடித்ததாக கூறி, அந்த படகுகளில் இருந்த 22 மீனவர்களை கைது செய்து படகுகளுடன் காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு கொண்டு சென்றதாக தெரிகிறது.

இந்நிகழ்வு இரண்டு மாதங்களாக கடலுக்கு செல்லாமல், தற்போது தான் தடைக்காலம்  முடிந்து சென்ற மீனவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடந்த ஜனவரியில் இருந்து இலங்கை கடற்படை இதுவரை 27 படகுகளையும், 204 தமிழக மீனவர்களையும் கைது செய்துள்ளனர். 

இந்நிலையில் இன்று பிற்பகல் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை மீட்டு தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கும் வரை நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rameswaram Fishermens Announced Strike From Tomorrow For Fishermen Arrested By Srilankan Govt


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->