ராமேசுவர மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை: வானிலை மையம் திடீர் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. 

அதுக்கேற்றார் போல் ராமேஸ்வர கடல் பகுதியில் வழக்கத்தை விட இன்று காலை மாறுபட்ட வானிலை காணப்பட்டால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் போன்ற பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகங்களிலும் நடுக்கடலில் நங்கூரமிட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் 5000கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை. ராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேருக்கு இலங்கை அரசு சிறை தண்டனை விதித்ததை கண்டித்து காலவரையற்ற போராட்டத்தை தொடங்கிய மீனவர்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் ராமேஸ்வரர் மீனவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடை பயணம் சென்ற போது அவர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையை ஏற்றுக் கொண்டு மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

8 நாள்களுக்கு பிறகு மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற நிலையில் இன்று சூறைக்காற்று காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 2000க்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rameshwaram fishermen not go sea


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->