விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில்... மனைவியை ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே வெட்டிக்கொலை செய்த கணவன்.! - Seithipunal
Seithipunal


இராமநாதபுரம் மாவட்டத்தில் வ.உ.சி நகர் பகுதியை சார்ந்தவர் சரவணன். இவரது மனைவி சிவபாலா. இவர்கள் இருவருக்கும் இடையே மலர்ந்த காதலை தொடர்ந்து, பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துள்ளனர். 

தற்போது இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில், தம்பதிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிய முடிவு செய்துள்ளனர். இவர்களின் விவாகரத்து தொடர்பான வழக்கு இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது. 

இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்காக சிவபாலா நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக வந்துகொண்டு இருந்துள்ளார். இதன்போது சிவபாலாவை இடைமறித்த சரவணன், தான் கொண்டு வந்திருந்த அரிவாளால் மனைவியை வெட்டிக்கொலை செய்துள்ளார். 

மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு அருகேயே நடத்த கொலையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சிவபாலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சரவணனை கைது செய்த காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram Wife Murder By Husband Saravanan Due to Divorce Case 22 December 2020


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal