தாலியில் வைத்த மஞ்சள், குங்குமம் காய்வதற்குள் நெஞ்சை பிடித்து விழுந்த மணமகன்.. திருமண வீடே சோகமான பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலாடி இளஞ்செம்பூர் கிராமத்தை சார்ந்தவர் மலைச்சாமி. இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் பகுதியில் தற்போது வசித்து வருகிறார். இவரது மகன் விக்னேஸ்வரன் (வயது 27). 

விக்னேஸ்வரனிற்கும், சாயல்குடி பகுதியை சார்ந்த பெண்ணுக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்து, திருமண நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் நேற்று சாயல்குடி பகுதியில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

பின்னர், இருவீட்டாரும் மணமக்களை வாழ்த்திய நிலையில், திருமணம் முடிந்த ஜோடிகள் மணமகள் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு விருந்து நடைபெற்ற நிலையில், மதியம் 3 மணியளவில் விக்னேஸ்வரன் நெஞ்சில் கைவைத்தவாறு அலறியபடியே விழுந்துள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், விரைந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அலைத்து செல்லவே, அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். திருமணம் முடிந்த சில மணிநேரத்திற்கு உள்ளாகவே மணமகன் இறந்ததால் பெரும் சோகம் ஏற்பட்டது. தனது கணவரின் உடலை கட்டியணைத்து மனைவியும் அழுதது உறவினர்களிடையே கண்ணீரை ஏற்படுத்தியது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ramanathapuram New Married Person Died Heart Attack Relatives Feeling Sad


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->