காவிரி நீர் வரவில்லை என்றேன்... உடனே கைது செய்தனர்...! - உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்...! - Seithipunal
Seithipunal


அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற வடக்கு மண்டல வழக்கறிஞர்கள் கூட்டத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது, அண்மையில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள், தன்னை கைது செய்த சம்பவம், த.வெ.க. அரசின் செயல்பாடுகள் மற்றும் சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்து அவர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.

உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “கடந்த தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அதிர்ச்சி அளிக்கும் முடிவு வந்தது. தற்போது நின்றாலும் கைது, நடந்தாலும் கைது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. திட்டமிட்டு கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் இந்த குழுவினரே எதிர்பார்க்காத தேர்தல் முடிவு கிடைத்துள்ளது.என்னை கைது செய்து தஞ்சைக்கு அழைத்துச் சென்றபோது, அதை ஒரு சுற்றுலா பயணம் போலவே எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியாக சென்றேன்.

‘டம்மி முதல்-அமைச்சர்’ என்று கூறியதற்காகத்தான் என்னை கைது செய்ய வந்திருக்கிறார்களோ என்று நினைத்தேன்” என்றார்.மேலும் அவர் கூறுகையில், “காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று பேசியதற்காக என்னை கைது செய்தனர். அப்போது காலை 10.30 மணி வரை கைது செய்யக்கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னிடம் கூறியிருந்தார்.

ஆனால், தி.மு.க. வழக்கறிஞர்கள் மின்னல் வேகத்தில் சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தனர். காவலர்கள் என்னை கைது செய்ய வந்தபோது நான் அமைதியாக செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தேன். என்னை கைது செய்து மிரட்டிப் பார்க்க த.வெ.க. அரசு முயற்சி செய்துள்ளது.

தேர்தலுக்குப் பிறகு சோர்வடைந்திருந்த தி.மு.க.வினர், என்னை கைது செய்த சம்பவத்துக்குப் பிறகு மீண்டும் பழைய வேகத்துடன் களப்பணிக்கு திரும்பியுள்ளனர். கைது செய்யப்பட்டிருந்த நேரத்திலும் சரியான நேரத்தில் காபி, பழச்சாறு என அனைத்தையும் வழங்கினர்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து த.வெ.க. அரசை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின், “யார் அமைச்சர்கள், யார் சட்டமன்ற உறுப்பினர்கள் என்பதே நமது ‘டம்மி’ முதல்-அமைச்சருக்குத் தெரியவில்லை. தி.மு.க.வின் வரலாறும் த.வெ.க.வினருக்குத் தெரியவில்லை.தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளையும் காவலர்கள் மூலம் மிரட்டுகிறார்கள்.

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயனையும் கைது செய்து மிரட்டிப் பார்த்தனர். தட்டுத்தடுமாறி புதிய குழுவினர் அதிகாரத்துக்கு வந்துள்ளனர்.என்னை கைது செய்துவிட்டு, கைது செய்யும் எண்ணமே இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது த.வெ.க. அரசு” என்று குற்றம்சாட்டினார்.சட்டப்பேரவை செயல்பாடுகள் குறித்தும் உதயநிதி ஸ்டாலின் விமர்சனங்களை முன்வைத்தார்.

சட்டப்பேரவையில் அமைச்சர்களிடம் ஒரு கேள்வி கேட்டால், ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு விதமாக பதில் அளிக்கிறார்கள். தாங்கள் எந்தத் துறையை நிர்வகிக்கிறோம் என்பதே சில அமைச்சர்களுக்குத் தெரியவில்லை.சீட்டுக்கட்டில் ஒன்று அல்லது இரண்டு நகைச்சுவை அட்டைகள் இருக்கும்.

ஆனால், த.வெ.க.வில் அனைவருமே நகைச்சுவை கதாபாத்திரங்களாக உள்ளனர். நாங்கள் எந்தவித செலவும் செய்யாமல் சாலைப் பேரணி நடத்துவதற்குக்கூட இந்த அரசு உதவி செய்துள்ளது.தி.மு.க.வினர் இனிமேல் கூடுதல் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். ஆட்சி செல்லச் செல்ல அமைச்சர்கள் ஒவ்வொருவராக பல்வேறு பிரச்சினைகளில் சிக்குவார்கள்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cauvery water is not coming they immediately arrested me Udhayanidhi Stalin obsession


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?




Seithipunal
--> -->