ராமநாதபுரத்தில் 700கிலோ போதைப்பொருள் பறிமுதல்! தீவிரப்படுத்தப்படும் வாகன சோதனை! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்ததையடுத்து, கேணிக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் பரிமாறப்பட்டு நேற்று இரவு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

இதையடுத்து கேணிக்கரை சார்பு ஆய்வாளர் தினேஷ் தலைமையில் போலீசார் ராமநாதபுரத்தில் கான்சாகிப் தெரு மற்றும் நாகநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஒரு வாகனத்தைக் கண்டு போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, அந்த வாகனத்தை மறித்து சோதனையிட்டனர்.

அப்போது அந்த வாகனத்தில் மூட்டை மூட்டையாக சுமார் 700 கிலோ அளவுள்ள தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த 700 கிலோ எடையுள்ள போதைப் பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.

மேலும் அந்த வாகனத்தில் பயணித்த ஆறு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் வாகன சோதனையை தீவிரப்படுத்தக்கோரி ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram 700 kg kanja seized police


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->