#அன்றே_சொன்ன_ரஜினி: நீதிமன்றத்தின் கண்டனத்தை சுட்டிக்காட்டி, ட்விட்டரை தெறிக்கவிடும் ரஜினி ரசிகர்கள்..!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருந்து வந்த நடிகர் ரஜினிகாந்த், தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றும், அதனை நிரப்ப நான் அரசியலுக்கு வருகிறேன் என்றும் தெரிவித்தார். இறுதி நேரத்தில், ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட ரஜினியுடன் பணியாற்றிய குழுவினருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி, ரஜினிக்கும் லேசான உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் அரசியலுக்கு வரும் முடிவை நிறுத்துவதாகவும் தெரிவித்தார். 

இந்த விஷயம் தொடர்பாக சுமார் 4 பக்க அறிக்கைகள் மூலமாக தனது நிலைமையை தெளிவுபடுத்தியிருந்த நிலையில், இறுதியாக " இந்த கொரோனா உருமாறி புது வடிவம்‌ பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது.

அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால்‌ நாலு பேர்‌ நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள்‌ என்பதற்காக என்னை நம்பி என்‌ கூட வருபவர்களை நான்‌ பலிகடா ஆக்க விரும்பவில்லை. நான்‌ உண்மையை பேச என்றுமே தயங்‌கியதில்லை " என்று தெரிவித்து இருந்தார். 

ரஜினிகாந்தின் கூற்றை உறுதி செய்யும் பொருட்டு, இன்று சென்னை நீதிமன்றம் தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து, சரமாரி கேள்வி எழுப்பி இருந்தது. 

இது தொடர்பான நீதிமன்ற வாதத்தில் நீதிபதிகள், " சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் இன்றி அரசியல் கட்சிகள் தங்களின் விருப்பம் போல் பிரச்சாரம் செய்ததால் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்தால் கொரோனா அதிகரித்ததற்கு தேர்தல் ஆணையமும் முழுமுதற் காரணமாக இருக்கிறது. 

அரசியல் கட்சிகளை தடுக்க தவறியது மற்றும் கொரோனா விழிப்புணர்வுகளை கடைபிடிக்க அறிவுறுத்தாதது, அதனை மீறும் கட்சிகளுக்கு கண்டனம் அல்லது புகார் தெரிவிக்காதது என்று தேர்தல் ஆணையம் அலட்சியமாக இருந்துவிட்டது. 

தேர்தல் பிரச்சாரம் நடக்கையில் தேர்தல் அதிகாரிகள் வேற்றுகிரகத்தில் இருந்தார்களா?. தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக்குற்றம் சுமத்தினாலும் தவறே கிடையாது " என்று தெரிவித்தனர். இந்நிலையில், ட்விட்டர் தளத்தில் ரஜினியின் உண்மையான ரசிகர்கள் (ரஜினியின் முடிவில் உறுதியாக, உறுதுணையாக இருந்தவர்கள்) #அன்றே_சொன்ன_ரஜினி என்ற ஹாஷ்டேக்குகளை, ரஜினியின் அறிக்கையுடன் ஒப்பிட்டு பதிவு செய்து ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth Fans Social Media Trend about Rajini Political Leave Announcement Corona Secondwave


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->