#BREAKING :: ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம் சுதாகர் மறைவுக்கு நடிகர் ரஜினி இரங்கல்..!!
Rajini condoles death of people council executive VM Sudhakar
நடிகர் ரஜினிகாந்தின் மக்கள் மன்ற தலைமை நிர்வாகியும் அவருடைய நெருங்கிய நண்பருமான வி.எம் சுதாகர் இன்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த வி.எம் சுதாகர் சிகிச்சை பலன் இன்றி இன்று காலை காலமாகியுள்ளார். அவரின் இறப்பிற்கு பல்வேறு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வி.எம் சுதாகரின் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "என்னுடைய அருமை நண்பர் வி.எம் சுதாகர் நம்மை விட்டு பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்" என பதிவிட்டுள்ளார்.
English Summary
Rajini condoles death of people council executive VM Sudhakar