இளைஞர்களின் முயற்சியால் தூர்வாரப்பட்ட இராஜபாளையம் சொக்கலிங்காபுரம் குளம் மறுகால் பாயும் அழகிய காணொளி.!
Rajapalayam Chokkalingapuram Village youngsters Cleaning pond and staggered water
சொக்கலிங்காபுரம் கிராமத்தில் இளைஞர்களின் முயற்சியால் தூராவரப்பட்ட குளம் நிரம்பி மறுகால் பாயும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
இளைஞர்கள் நினைத்தால் எந்த சாதனையும் செய்யலாம் என்பதற்கு உதாரணமாக பல விஷயங்கள் நடைபெற்று வருகிறது. பல இளைஞர்கள் உலகளவில் பல புகழை பெற்று வருகின்றனர். அந்த வகையில், புதர்கள் மண்டி கிடந்த குளத்தை சீரமைத்து, இளைஞர்கள் செய்த மகத்தான சேவையால், அக்குளம் நிரம்பி மறுகால் பாய்கிறது.

விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையத்தை அடுத்து உள்ள கிராமம் சொக்கலிங்காபுரம் கிராமம். இந்த கிராமத்தில் குளம் உள்ளது. இந்த குளம் கருவேல மரத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டு, குளத்தில் நீரை சேகரித்து வைக்கும் தடுப்பு அமைப்பு பாழாகி இருந்தது.
இதனையடுத்து அந்த கிராமத்து இளைஞர்கள் குளத்தை சீரமைக்க முடிவு செய்து, அக்கிராம மக்கள் மற்றும் நிர்வாகத்தினர் உதவியுடன் குளத்தினை சீரமைத்து தடுப்புகளை கட்டியுள்ளனர். தற்போது மழைக்காலம் என்பதால், கொஞ்சம் கொஞ்சமாக குளத்தில் நீர் நிரம்பி வந்தது.

இந்நிலையில், இன்று அந்த குளத்தில் இருந்து நீர் முழுவதுமாக நிரம்பி மறுகால் பாய்ந்து செல்கிறது. இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இளைஞர்கள் நினைத்தால் சாதிக்க இயலாதது ஏதும் இல்லை என்பதை மீண்டும் இக்கிராமத்தினர் நிரூபித்துள்ளனர்.
ஏற்கனவே இக்கிராமத்தில் பிளாஸ்டிக் கேனால் செய்யப்பட்ட இருக்கைகள், கருவேல மரத்தினை அகற்றி பயன்தரும் மரங்களை நடுதல் போன்ற பல விஷயங்கள் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான பல காணொளிகளும் செய்திகளாக வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
English Summary
Rajapalayam Chokkalingapuram Village youngsters Cleaning pond and staggered water