பரந்தூரில் ரயில் நிலையம் - தீவிர சோதனையில் அதிகாரிகள்..! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 4791 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ளது. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட பதின்மூன்றாவது கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

புதிய விமான நிலையம் சென்னை நகரில் இருந்து சுமார் 67 கி.மீட்டர் தூரத்தில் வருகிறது. அரக்கோணம்-காஞ்சிபுரம் ரயில் பாதையில் திரிசூலம் ரயில் நிலையத்தில் இருந்து 10 கி.மீட்டர் தூரத்தில் அமைய உள்ளது.

இதற்கிடையே பரந்தூரில் விமான நிலையம் அமையும் போது போக்குவரத்து வசதியையும் மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து ரயில் திட்ட பாதையை பரந்தூர் புதிய விமான நிலையம் வரை நீட்டிக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. 

ரயில் பாதை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்கான ஆய்வு பணியை செங்கல்பட்டு-அரக்கோணம் ரயில்வே பாதையில் விரைவில் மேற்கொள்ள ரயில்வேதுறை முடிவு செய்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

railway station set in paranthur


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->