ரெயில்வேயின் ‘வசூல் சக்கரவர்த்தி’...! தெற்கு ரெயில்வேக்கு ரூ.100 கோடி லாபம் ஈட்டித் தந்த ஒரே ஒரு ரெயில்...எது தெரியுமா...? - Seithipunal
Seithipunal


இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரியில் இருந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களை இணைக்கும் வகையில் ஏராளமான நீண்ட தூர ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அவற்றில், நாட்டிலேயே மிக நீண்ட தூரம் பயணிக்கும் சிறப்புமிக்க விவேக் அதிவிரைவு ரெயில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலத்தின் திப்ரூகர் வரை இயக்கப்படும் இந்த ரெயில், ஒன்பது மாநிலங்களை கடந்து சுமார் 4 ஆயிரத்து 158 கிலோமீட்டர் தொலைவை இணைக்கிறது.

ஆரம்பத்தில் வாராந்திர சேவையாக இயக்கப்பட்ட இந்த ரெயில், பயணிகளின் வரவேற்பை தொடர்ந்து தற்போது தினசரி சேவையாக மாற்றப்பட்டுள்ளது.குமரி மாவட்ட மக்கள் இந்த ரெயிலை குறைந்த அளவிலேயே பயன்படுத்தி வந்தாலும், வடமாநிலங்கள் மற்றும் வடகிழக்கு பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் முதன்மை தேர்வாக இந்த ரெயில் விளங்கி வருகிறது.

இந்நிலையில், தெற்கு ரெயில்வேயின் 2025-26 நிதியாண்டுக்கான வருவாய் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் அதிக வருவாய் ஈட்டிய முதல் 50 ரெயில்களின் பட்டியலில் விவேக் அதிவிரைவு ரெயில் முதலிடத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்த ரெயில் மட்டும் ரூ.100 கோடியே 57 லட்சத்து 48 ஆயிரத்து 56 வருவாய் ஈட்டி தெற்கு ரெயில்வேயின் வருவாய் நாயகனாக உருவெடுத்துள்ளது.

அதேபோல், நாகர்கோவில் - சென்னை வந்தே பாரத் ரெயில் ரூ.6.59 கோடி வருவாய் ஈட்டி 11-வது இடத்தைப் பிடித்துள்ளது. கன்னியாகுமரி - புனே விரைவு ரெயில் ரூ.5.14 கோடி வசூலுடன் 22-வது இடத்தையும், கன்னியாகுமரி - பெங்களூரு விரைவு ரெயில் ரூ.4.04 கோடி வருவாயுடன் 34-வது இடத்தையும் கைப்பற்றியுள்ளன.

மேலும், கன்னியாகுமரி - சென்னை அதிவிரைவு ரெயில் ரூ.3.76 கோடி வருவாய் பெற்று 40-வது இடத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த ரெயிலும், வந்தே பாரத் ரெயிலும் குமரி மாவட்ட மக்களின் அன்றாட மற்றும் அவசர பயணத் தேவைகளில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.

குறிப்பாக, சென்னைக்கான பயண நேரத்தை வெகுவாக குறைத்து வசதியான சேவையை வழங்கி வரும் வந்தே பாரத் ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு நிலவி வருகிறது.

இதன் காரணமாக நெல்லை மற்றும் மதுரை வந்தே பாரத் ரெயில் சேவைகளையும் கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பயணிகள் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

தெற்கு ரெயில்வேயின் வருவாய் பட்டியலில் கன்னியாகுமரியை மையமாகக் கொண்ட பல்வேறு ரெயில்கள் முன்னணி இடங்களைப் பிடித்திருப்பது, குமரி மாவட்டத்தின் ரெயில் போக்குவரத்து முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Railway Crazy Revenue King only train that earned profit 100 crore Southern Railway Do you know what


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->