இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னையில் பறக்கும் ரயில் சேவை: கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கியுள்ள ரயில்வே வாரியம்..!
Railway Board has given in principle approval for flying train service in Chennai by the end of this year
சென்னை பறக்கும் ரயில் மெட்ரோ ரயில் இணைப்பு கொள்கை அளவிலான ஒப்புதலை ரயில்வே வாரியம் வழங்கியுள்ளது. அத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு பணிகள் அடுத்த 03 மாதத்திற்குள் நிறைவடையும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை பெருநகர் ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் இந்தப் பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் பறக்கும் ரயில் சேவை மெட்ரோ ரயிலுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் பறக்கும் ரயில் சேவையை இணைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல முயற்சிகள் எடுத்து வருகின்ற நிலையில் குறித்த ஒப்புதல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பறக்கும் ரயில் சேவையை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நிதிக்கூட்டத்தில் பிரதமர் மோடியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார். இதனை தொடர்ந்து இந்த பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் பறக்கும் ரயில் சேவை மெட்ரோ ரயில் இணைப்பு பகுதிகளை கொள்கை அளவிலான ஒப்புதலை ரயில்வே வாரியம் வழங்கியுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னை பறக்கும் ரயில் சேவையை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டு அது மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கப்பட்டு அந்த வழிதடங்கள் அனைத்தும் தமிழக அரசின் ஒப்படைக்க படும் என்று எதிர்பார்க்க படுகிறது.
English Summary
Railway Board has given in principle approval for flying train service in Chennai by the end of this year