நடிகர் சூரியின் ஓட்டலில் ரெய்டு! மொத்தமாக சிக்கிய பொருட்கள்! நேரில் ஆஜராக உத்தரவு! - Seithipunal
Seithipunal


ஜிஎஸ்டி வரி இல்லாமல் உணவு விற்பனை என குற்றச்சாட்டு!

வெண்ணிலா கபடி குழு படத்தின் பரோட்டா காமெடியின் மூலம் பிரபலமானவர் நடிகர் சூரி. தற்பொழுது முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்.

சினிமா நடிப்பது மட்டுமல்லாமல் மதுரையில் அம்மன் ஹோட்டல் என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார். அந்த உணவகத்தில் ஜிஎஸ்டி வரி இல்லாமல் உணவுக்கான கட்டணம் பெறப்படுவதாக புகார் எழுந்த நிலையில் வணிகவரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த சோதனையில் உணவகத்திற்கு உணவுப் பொருட்கள் ஆவணங்கள் இல்லாமல் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டதாகவும் தெரிய வருகிறது. 

மேலும் அவர் இது குறித்து 15 நாட்களுக்குள் வணிகவரித்துறை அதிகாரியின் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என வணிகவரித்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Raid on actor Soori hotel


கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வைAdvertisement

கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வை
Seithipunal