வேங்கைவயல் விவகாரம் | நீர்தேக்க தொட்டியை இடிக்க தமிழக அரசு உத்தரவு!
pudukottai TamilNadu goverment
புதுக்கோட்டை : வேங்கைவயல் கிராமத்தில் நீர்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்த விவகாரத்தில், நீர்தேக்க தொட்டியை இடிக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமூகத்தினர் பயன்படுத்தும் குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மலம் கழிந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
மலம் கலந்த இந்த குடிநீர் தொட்டி நீரை குடித்ததில் குழந்தைகள் உட்பட பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வழக்கு விசாரணை சிபிசிஐடி.,க்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையே சம்மந்தப்பட்ட அந்த நீர்த்தேக்க தொட்டியை இடிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு இடிக்க உத்தரவிட்டுள்ளது.
English Summary
pudukottai TamilNadu goverment