இன்று அதிமுகவை எதிர்த்து டாஸ்மாக் வாடிக்கையாளர்கள் செய்யப்போகும் சம்பவம்! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை, ஆலங்குடி அருகே டாஸ்மார்க் கடைகளை எதிர்த்து அதிமுக போராட்டம் நடத்த இருந்த நிலையில், டாஸ்மார்க் கடைக்கு ஆதரவாக டாஸ்மார்க் வாடிக்கையாளர்கள் எதிர் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அடுத்த கொத்தமங்கலம் ஊராட்சியில் இருந்த இரண்டு டாஸ்மார்க் கடைகள், பொது மக்களின் போராட்டம் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டன.

இந்த நிலையில், கடந்த வாரத்தில் கொத்தமங்கலம் பகுதியில் மீண்டும் ஒரு டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டது.

இந்த டாஸ்மார்க் கடையை மூடக்கோரி அதிமுக தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின் முடிவில் இந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி இன்று போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இதனை அறிந்த சுமார் 200க்கும் மேற்பட்ட வணிகர்கள், டாஸ்மார்க் கடை வாடிக்கையாளர்கள் தனியாக ஒரு கூட்டத்தை நடத்தினர்.

இந்த கூட்டத்தில் கொத்தமங்கலம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக் கூடாது என்று ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றி உள்ளனர்.

மேலும் அந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினால், அவர்களை எதிர்த்து அதே இடத்தில் எதிர் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukottai ADMK vs TASMAC Customers Protest


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->