விசில் பறக்க பெரம்பூரில் களமிறங்கும் விஜய்...! - தவெக பிரச்சாரப் பயணம் தொடக்கம்...!
Vijay Hits Ground Running Perambur TVK Campaign Tour Kicks Off
பெரம்பூர் அரசியல் அரங்கில் புதிய பரபரப்பை கிளப்பும் விதமாக, தவெக கட்சியின் தலைவர் விஜய் விரைவில் தனது தேர்தல் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ள தவெக, சுமார் 100 தொகுதிகளில் களம் காணவுள்ள வேட்பாளர்களின் தேர்வை நிறைவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கட்சி தனது அரசியல் நகர்வுகளை வேகமூட்டியுள்ளது.
இந்நிலையில், வரும் 25 அல்லது 26ஆம் தேதிகளில் பெரம்பூரில் நடைபெறவுள்ள முக்கியக் கூட்டத்தில் விஜய் நேரில் பங்கேற்று, தனது தேர்தல் பிரச்சாரப் பயணத்தை துவக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்வு, மாநில அரசியலில் புதிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Vijay Hits Ground Running Perambur TVK Campaign Tour Kicks Off