போதைக்கு அடிமையான மகன்.. பெற்றோரே அடித்து கொலை செய்து, உடலை வனத்தில் வீசிய பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


போதைக்கு அடிமையான மகனை பெற்றோரே அடித்து கொலை செய்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் மெய்யபுரம் பகுதியை சார்ந்தவர் திவ்யநாதன். இவரது மனைவி ராஜம்மாள். இவர்களது மகன் செல்லத்துரை. செல்லத்துரைக்கு மதுபானம் அருந்தும் பழக்கம் இருந்து வந்த நிலையில், பின்னாளில் போதை பொருட்களை உபயோகம் செய்யும் பழக்கத்தையும் கற்றுள்ளார். 

போதை பொருட்களை வாங்க முதலில் பெற்றோரிடம் சண்டை செய்து பணத்தை பறித்து சென்ற நிலையில், பின்னாளில் இது திருடும் அளவுக்கு வந்துள்ளது. மகனை நல்வழிப்படுத்தும் பொருட்டு பெற்றோர்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் அவை கைகொடுக்கவில்லை. 

இதனையடுத்து, மகனை கொலை செய்துவிடலாம் என திவ்யநாதன் - ராஜம்மாள் தம்பதி முடிவெடுக்க, இளையமகன் ஜெகனும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். இவர்களின் திட்டப்படி, சம்பவத்தன்று மதுபானம் வாங்கி தந்து, அதிகளவு மதுவை செல்லத்துரைக்கு கொடுத்து அருந்தவைத்துள்ளனர். 

பின்னர், கொடைக்கானல் அழைத்துச்சென்று இரும்பு கம்பியால் தலையில் தாக்கி கொலை செய்துள்ளனர். உடலை வனப்பகுதியில் வீசி சென்ற நிலையில், சம்பவம் நடைபெற்று ஒரு வாரம் கழித்து உடல் மீட்கப்பட்டு கொடைக்கானல் காவல் துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த விசாரணையில் மேற்கூறிய தகவல்கள் உறுதியாகவே, காவல் துறையினர் தம்பதி திவ்யநாதன் - ராஜம்மாள் மற்றும் ஜெகனை கைது செய்துள்ளனர். மது மற்றும் போதை அரக்கனால் பல்வேறு துயரங்களை அனுபவித்த குடும்பம், குடும்பத்தில் ஒரு உயிரை கொலை செய்து கொலையாளிகளாக மாறியுள்ளது. இனியாவது தமிழக அரசு விரைந்து மதுபானக்கடைகளை மூட வேண்டும். மதுவில்லா மாநிலமாக தமிழகம் உருவாக வேண்டும். போதைப்பொருள் ஒழிப்பு சட்டத்தை கடுமையாக கடைபிடிக்க வேண்டும்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pudukkottai Tirumayam Man Murder by Parents due to His Drug Audit Habit


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->