#Breaking: தாயை சொத்துக்காக கொலை செய்த மகனுக்கு தூக்கு தண்டனை - புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


பெற்றெடுத்த தாயை கழுத்தறுத்து கொலை செய்த மகனுக்கு, நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி மரவக்கோட்டை பகுதியை சார்ந்தவர் ஆனந்த். இவரது தாய் திலக ராணி. இவர், கடந்த 18-3-2018 அன்று மரவப்பட்டி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருக்கையில், தந்தையின் பெயரில் உள்ள சொத்துக்களை மகன் தனது பெயருக்கு மாற்றி கேட்டு இருக்கிறார். 

இதன்போது, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த தங்கராஜ் என்ற ஆனந்த், தனது தாயை மறைத்து வைத்திருந்த அரிவாளால் தலையை துண்டித்து கொலை செய்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இன்று இவ்வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி முனைவர் சத்யா முன்னிலையில் விசாரணைக்கு வரவே, தாயை கொலை செய்த ஆனந்துக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், ரூ.50 ஆயிரம் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளார். அபராதம் கட்டத்தவரும் பட்சத்தில், 2 வருட கடுங்காவல் தண்டனைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pudukkottai Court Death Sign to Mother Murder by Son due to Land Document Issue 1 Oct 2021


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->