10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு.. தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு சமீபத்தில் முடிவடைந்தது.

இந்த நிலையில் நடப்பாண்டுகாண பொது தேர்வை சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். இதில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ம் தேதியும் தொடங்க உள்ளது.

அதனைத் தொடர்ந்து, மே 5ம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், மே 17ஆம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், மே 19ம் தேதி 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று மின்வாரியம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் பொது தேர்வுகளுக்கான தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மேலும், பொதுத்தேர்வு எழுதும் தேர்வு மையங்களில் மின்தடை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முன்னேற்பாடுகளை செய்யவும், மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

public examination Electricity Board orders to provide uninterrupted electricity


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->