பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணைபடி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ம் தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

அதன்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8,51,303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23,747 பேரும் என மொத்தம் 8,75,050 பேர் எழுதி வருகின்றனர். இதனையடுத்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3225 இடங்களில் இதற்காக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வான ஆங்கில மொழித்தேர்வை 49,000 மாணவர்கள் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த மார்ச் 13ஆம் தேதி நடைபெற்ற தமிழ் மொழி தேர்வை 50,000 மாணவர்கள் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழ் மொழி தேர்வை எழுதாத மாணவர்கள் தான் நேற்றைய தினம் நடைபெற்ற ஆங்கில மொழி தேர்வையு எழுதவில்லை என பள்ளி கல்வித்துறை தகவல் தெரிவித்திருந்தது.

 இந்த நிலையில் தேர்வு எழுதாத மாணவா்களுக்கு மீண்டும் ஜூன் மாதத்தில் உடனடித் தோவு எழுத வாய்ப்பு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Public exam missed students next attempts on june


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->