பொய் குற்றச்சாட்டால் +2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை..! தனியார் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கைது..!! - Seithipunal
Seithipunal


[ உங்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றினால் உடனே அழையுங்கள் :  மாநில சுகாதார துறை தற்கொலை தடுப்பு உதவி எண் - 104, சினேஹா தற்கொலை தடுப்பு மையம் - 044-24640050 

உங்களின் தோழன், தோழியாக பரிவுடன் பேச தயார். உங்கள் தனிப்பட்ட விவரம் வெளியிடப்படாது. பயமின்றி அழையுங்கள். புது வாழ்வை நம்பிக்கையுடன் தொடங்குங்கள்]

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நீலாங்கரையைச் சேர்ந்த மகேஷ் பணியாற்றி வருகிறார். இவருக்கு கவின்குமார் தர்ஷன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் கவின்குமார் நேற்று காலை தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கவின்குமாரை மீட்ட பெற்றோர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

கவின்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கடந்த வாரம் மகேஷின் இரண்டாவது மகன் தர்ஷன் வகுப்பறையில் தூங்கிக் கொண்டிருந்ததை ஆசிரியர் ஒருவர் கண்டித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மகேஷ் பள்ளி நிர்வாகத்திடம் அந்த ஆசிரியர் குறித்து புகார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கவின் குமார் மற்றும் தர்ஷன் இருவருமே இரண்டு நாட்களாக பள்ளிக்குச் செல்லவில்லை என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இருவரும் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றுள்ளனர். அப்பொழுது பள்ளி முதல்வர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் இருவரும் கவின்குமாரிடம் பள்ளிக் கழிவறையில் ஹான்ஸ், கூல் லிப் வைத்திருந்தது நீதானே என்று கேட்டு அடித்ததாக சொல்லப்படுகிறது. மேலும் கவின்குமாரிடம் புகையிலை பொருளை பயன்படுத்தியதாக கடிதம் எழுதி தரச் சொல்லி அனைத்து மாணவர்களின் முன்னிலையிலும் சட்டையை பிடித்து இழுத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த கவின்குமார் நேற்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மகன் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தி தற்கொலைக்கு தூண்டிய பள்ளி நிர்வாகம் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவின் குமார் தந்தை போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் நீலாங்கரை போலீசார் உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியரின் பொய்யான குற்றச்சாட்டால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PT teacher arrested for +2 student hanging due to false accusation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->