பொள்ளாச்சி அருகே கொடூரம்; தூங்கிக்கொண்டிருந்த நண்பனின் கழுத்தையறுத்து கொலை; சடலத்துடன் செல்ஃபி எடுத்து அனுப்பிய சைக்கோ நண்பர்கள்..!
Psycho friends who slit the throat of a sleeping friend near Pollachi and sent a selfie
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தூங்கிக்கொண்டிருந்த நண்பனைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, நண்பனின் சடலத்துடன் செல்ஃபி எடுத்து அதனை மற்றைய நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் பகிர்ந்த இரண்டு கொடூர இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயதான கூலித்தொழிலாளியான அஸ்வின். வழக்கம் போல் பணி முடிந்து தனது நண்பர்களின் வீட்டில் தூங்கச் சென்றுள்ளார். நள்ளிரவில் நண்பர்களுக்கு இடையேயான தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த 02 நண்பர்கள், தூங்கிக் கொண்டிருந்த அஸ்வினை கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த இருவரும் நண்பனை கொலையைச் செய்த பிறகு, இரத்த வெள்ளத்தில் கிடந்த அஸ்வினின் உடலுடனும், கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களுடனும் கொலையாளிகள் செல்ஃபி எடுத்து, அந்தப் புகைப்படங்களைச் சக நண்பர்களுக்குப் பகிர்ந்துள்ளனர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலையாளிகளைத் தேடி வருவதோடு, கொடூரக் கொலைக்கான உண்மையான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Psycho friends who slit the throat of a sleeping friend near Pollachi and sent a selfie