'இதுதான் உண்மையான ஜனநாயகப் பண்பு'...! - முதல்வரின் நடவடிக்கைக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி புகழாரம்...!
This true characteristic democracy Manickam Thakur MP praises Chief Minister action
கட்சி எல்லைகளைக் கடந்து அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள முடிவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,"இன்று காலை 6.30 மணியளவில் தமிழ்நாடு இல்லத்திலிருந்து நேரடியாக வந்து வழங்கப்பட்ட இந்த அதிகாரப்பூர்வ அழைப்புக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 12 ஆண்டுகளில் 5 முதல்-அமைச்சர்களை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து பார்த்துள்ளேன். ஆனால், முதன்முறையாக அனைத்து கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நேரில் அழைத்து, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு ஒரே மேசையில் அமர்ந்து ஆலோசனை நடத்தும் முயற்சியை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மேற்கொண்டுள்ளார்.
ஜனநாயகத்தின் அடிப்படை மாண்பையும், மாநில நலனுக்கான ஒற்றுமையையும் வலுப்படுத்தும் இந்த முன்னுதாரணமான நடவடிக்கை பாராட்டுக்குரியது.மத்திய பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாட்டின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க, டெல்லியில் தமிழகத்தின் குரல் ஒருமித்த குரலாக ஒலிக்க வேண்டியது அவசியம்.
இதற்காக அனைத்து கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உரிய மரியாதையுடன் அழைப்பு விடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. மாநில நலனுக்காக அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான இந்த நல்ல மரபு தொடர்ந்து நீடிக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக அனைத்து தரப்பினரும் ஒருமித்த எண்ணத்துடன் கைகோர்க்கும் சூழல் உருவாகட்டும்! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
This true characteristic democracy Manickam Thakur MP praises Chief Minister action