வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல்... களம் இறங்கும் வேட்பாளர்கள்...! தாராபுரம் இடைத்தேர்தல் முன்னேற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர்...!
Voting machines sealed Candidates entering fray Collector personally inspects preparation Tarapuram by election
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குச்சாவடிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளிலும் நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட பலர் களத்தில் உள்ளனர். இதனால் இரு தொகுதிகளிலும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.இரு தொகுதிகளிலும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட உள்ளன.தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 9-ந்தேதி எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததும் அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதற்கிடையே, தாராபுரம் இடைத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை திருப்பூர் மாவட்ட கலெக்டர் இன்று நேரில் ஆய்வு செய்தார். வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறைக்கு சென்ற அவர், அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
மேலும், வாக்குப்பதிவு எந்திரங்களின் பாதுகாப்பு, அவற்றை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட தேர்தல் பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதேபோல், இடைத்தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார். வாக்குப்பதிவு நாளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் முழுமையாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Voting machines sealed Candidates entering fray Collector personally inspects preparation Tarapuram by election