புகாரளித்த மாணவியின் தந்தை வெட்டிக் கொலை... சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது CM Sir... வானதி சீனிவாசன்!
bjp vanathi srinivasan condemn to tvk govt law and order
பாஜக வானதி சீனிவாசன் விடுத்துள்ள கண்டன செய்தியில், திருத்தணி பெரியார் நகரில் தனது 17 வயது மகளுக்கு காதல் தொந்தரவு கொடுத்த இளைஞர்கள் மீது காவல்துறையில் மாணவியின் தாய் புகார் அளித்த நிலையில், மாணவியின் தந்தையை இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
முதல்வர் விஜய் அரசில் புகார் அளிப்பவர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டிருக்கும் சூழலில் பெண்களுக்கு இந்த அரசில் எப்படி பாதுகாப்பினை எதிர்பார்க்க முடியும்?
பெண்களைக் காப்பதற்கு சிங்கப் பெண் படை, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் என இருந்தும் புகார்களை சரியாகக் கையாளகாததன் விளைவாக குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்து மேலும் பல குற்றங்களைப் புரிவதும், ஆனால் புகார் கொடுத்தவர்களோ பயந்து கொண்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டே வாழும் சூழலை ஏற்படுத்தியிருப்பதுதான் தவெக அரசின் சாதனை.
English Summary
bjp vanathi srinivasan condemn to tvk govt law and order