தாம்பரம் - கடற்கரை ரெயில் சேவை பாதிப்பு...! கோட்டை ரெயில் நிலையத்தில் தடம் புரண்ட மின்சார ரெயில்...! - Seithipunal
Seithipunal


சென்னையில் பரபரப்பான காலை நேரத்தில் புறநகர் மின்சார ரெயில் தடம் புரண்டதால், தாம்பரம்–கடற்கரை வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி புறப்பட்ட புறநகர் மின்சார ரெயில், சென்னை கோட்டை ரெயில் நிலையத்திற்குள் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக ரெயிலின் 5-வது பெட்டியின் சக்கரம் தண்டவாளத்தை விட்டு விலகியது. இதனால் அந்த பெட்டி தண்டவாளத்தில் இருந்து இறங்கி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.சக்கரம் தடம் புரண்டதை அறிந்த என்ஜின் ஓட்டுநர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். தொடர்ந்து சம்பவம் குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் மீட்புப் பணியாளர்கள் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தடம் புரண்ட பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் நிலைநிறுத்தும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.இந்த தடம் புரண்ட சம்பவத்தால் தாம்பரம்–கடற்கரை இடையிலான புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

இதனால் ரெயில் நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், தங்களது வழக்கமான பயணத்தை தொடர முடியாமல் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

இதையடுத்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் அனைத்து புறநகர் ரெயில்களும் பூங்கா ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.இதற்கிடையே, ரெயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tambaram Beach train service affected Electric train derailed at Fort railway station


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->