கரூர் கம்பெனி பெயரில் டாஸ்மாக் கடையில் வசூல்! டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் போராட்டம்! - Seithipunal
Seithipunal


டாஸ்மாக் கடைகளில் கட்டாய வசூல் செய்வதை கண்டித்து சேலத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர். அந்த போராட்டத்தில் டாஸ்மாக் பார் ஊழியர்கள் நல சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் கரூர் கம்பெனி என்ற பெயரில் டாஸ்மாக் கடைகளில் வசூல் செய்வதை தடுக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த பாலசுப்பிரமணியன் "கரூர் கம்பெனி என்ற பெயரில் ஆளுங்கட்சியின் தொழிற்சங்கங்கள் நாளொன்றுக்கு ஒவ்வொரு  கடையிலும் 30 ஆயிரம், 40 ஆயிரம் கட்டாயம் கொடுக்க வேண்டும் என நிர்பந்திக்கிறார்கள். மொத்தத்தில் டாஸ்மாக் பணியாளர்களை அலைக்கழித்து, துன்புறுத்தி, அடிமைகளாக்கி, கொடுமைகளை செய்து வருகிற போக்கை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 

எனவே இந்த விஷயத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு அவர்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முன்பாக கரூர் கம்பெனி என்ற பெயரில் தமிழக முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தின் மூலமாக நடைபெறும் கொடுமைகளை தடுத்து நிறுத்த முன் வர வேண்டும் என தமிழக அரசை டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே பல்வேறு துறைகளில் உள்ள ஊழியர்கள் தமிழக அரசால் திணறி வரும் நிலையில் தற்போது டாஸ்மார்க் ஊழியர்களும் வீதிக்கு வந்து போராடும் நிலையில் தமிழக அரசின் நிர்வாகம் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆவின் பாலக ஏஜென்ட்கள் முதல் டாஸ்மார்க் ஊழியர்கள் வரை அனைவரும் தமிழக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைத்து வருவது தமிழக அரசின் நிர்வாகத் திறமையை வெளிக்காட்டுவதாக அரசியல் விமர்சனங்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Protest against collect money from Tasmark bars in the name of Karur Company


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->